Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில்….. “முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்”……!!!!!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது,

இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்த மண்டலம் 15 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மண்டலம் 1-ல் குறைந்தபட்சமாக ஐந்து பேருக்கு ரூபாய் 2500, மண்டலம் 5-ல் அதிகபட்சமாக 33 பேருக்கு ரூபாய் 16 ஆயிரத்து 500 ரூபாயில் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |