நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன் என்று சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக முழுவதும் சமீப காலமாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா,நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டப்படி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்.
அதிமுகவின் தலைமை பொறுப்பில் தற்போது இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவான மனநிலையோடு இருக்கின்றன. விரைவில் அதிமுக ஆட்சி அமைப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.