Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” மத்திய அரசின் திட்டத்தில்….. இவர்களுக்கு ரூ.3,592 கோடி கடன்…..!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் வேகமாக பரவி வந்தது. இதனால் பொருளாதார இழப்பை மக்கள் சந்தித்து வந்தனர். இதனால் வியாபாரிகள் மீண்டும் தங்களை வேலையை தொடங்குவதற்கு வசதியாக ஸ்வாநிதி என்ற திட்டத்தை கடந்த 2020 ஆம் வருடம் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் ஒரு வருட காலத்துக்கும் எந்தவித பினையும் இல்லாமல் பத்தாயிரம் மூலதனக் கடன் வழங்கப்படுகிறது. இதை சரியாக செலுத்தினால் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே இருபதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் இந்த வெற்றியை கலாச்சார நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கொண்டாட வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவானது நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 75 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவையில் 18ம் தேதியும், நாகர்கோவிலில் 22 ஆம் தேதியும், சென்னையில் 23ஆம் தேதியும் விழா நடத்தப்படுகிறது.

Categories

Tech |