Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன்” நீட் தேர்வினால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை….!!!

வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் எந்த இளங்கலை பாட பிரிவினை தேர்ந்தெடுப்பது,‌ பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகள் போன்றவைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியதாவது.  ஒரு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு கட்டாயம் தமிழ், ஆங்கிலம், கணினி மற்றும் உடல் மொழி போன்றவைகள் மிக முக்கியமானவை என்றார். அதன் பிறகு நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நாங்கள் படிக்கும் காலத்தில் இன்ஜினியரிங் சீட் கூட கிடைக்காது. இதனால் நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று கூறினால் நாங்கள் தற்கொலை செய்து கொண்டு விடுவோம் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் நாம் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். அந்த வேலை நம் மனதுக்கு பிடித்தமானதாக இருந்தாலே போதுமானது. இதனையடுத்து மாணவர்கள் நீட் தேர்வுக்கு அதிக அளவில் கவனம் செலுத்துவதால் தமிழ் மொழியில் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்குள் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கான மையங்கள் திறக்கப்படும் என்றார்.

Categories

Tech |