உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிய ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர்கள் ஐஎஸ்டி வில்சன் எலாஸ் மஸ்க்கின் மூலம் 5 குழந்தைகளை பெற்று உள்ளார். அதன்பிறகு கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்று உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்து உள்ளனர். மஸ்க்கிற்கு தற்போது மொத்தம் 9 குழந்தைகள் உள்ளது.
இது குறித்து பலர் அவரிடம் சமூக வலைதளம் மூலம் பல கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியவகையில் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “குறைந்த மக்கள் தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைவது நாகரீகம். இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.