Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரயில்வே பாதுகாப்புபடை சேவை பற்றி”…. தொடங்கிய விழிப்புணர்வு பயணம்…. வெளியான புகைப்படம்….!!!!!

சுதந்திரதின விழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புபடை சேவை தொடர்பாக சென்ற 1ஆம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணம் துவங்கியது. ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முல்லர் தலைமையில் 12 காவல்துறையினர் 6 மோட்டார் சைக்கிள்களில் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேசுவரம் ஆகிய முக்கிய நகரங்களிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் 1 வேனில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள் பொருத்தப்பட்டும், காணொலி காட்சி வாயிலாகவும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் மோட்டார் சைக்கிள்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ள ரயில்வே பாதுகாப்புபடை காவல்துறையினர், திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

அவர்களுக்கு ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் போன்றோர் வரவேற்பு அளித்தனர். அதன்பின் அவர்கள் ரயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் தொடர்பாக பயணிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையம் நோக்கி அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

 

Categories

Tech |