திடீரென தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்க நாட்டில் இண்டியானா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கரமாக தீ பிடித்தது. அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் படிகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அந்த வழியாக மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதனால் அவர்கள் மேல் தளத்தின் வழியாக தவிழ்ந்தபடி குழந்தைகளும் அவர்களின் குடும்பத்தினரும் ஜன்னலிருந்து கீழே குதிக்க தொடங்கினர்.
பின்னர் அவர்களை கீழே இருந்த காவல்துறையினர் பிடித்து காப்பாற்றினர். இந்தக் காட்சியை அதிகாரி ஒருவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.