Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணா வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்க உதவியா இருக்கும்…. ஆய்வில் வெளிவந்த தகவல்…..!!!!

வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகள் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வேற்றுகிரக வாசிகள் போன்ற மர்ம உருவம், பறக்கும் தட்டு ஆகியவை குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் ஆகும்.

மேலும் அண்மை காலங்களில் எந்த ஒரு தகவலையும் கொண்டுசெல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பான பல ஆய்வுகள் உலகம் முழுதும் ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் போட்டான்கள் என்று அழைக்கப்படும் ஒளியின் துகள்கள் அவற்றின் குவாண்டம் தன்மையை இழக்காமல் நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரங்களுக்கு அனுப்பப்படலாம் எனவும் இவ்வகையான செய்திகளை வேற்றுகிரக வாசிகள் பூமியுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தலாம் என்றும் புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது வேற்றுகிரக வாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாகும் என புது ஆராய்ச்சி கூறுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்ஜுன் பெரேரா கூறியதாவது, புத்திசாலித்தனமான வேற்றுகிரக வாசிகள் குவாண்டம் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதற்கு அதிக சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |