Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்…. அரசு வெளியிடப் போகும் செம ஹேப்பி நியூஸ்… எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவையில் உள்ள அகலவிலைப்படி பாக்கி தொகையும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகலவிலை படியை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக பலமுறை அரசு ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் உள்ள அகலவிலைப்படி பாக்கியில் இரண்டு லட்சம் போட போவதாக செய்திகள் வெளியாகிறது.

ஆனால் அதனை மத்திய அரசு மறுத்தது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் மொத்தமாக 1.50 இலட்சத்தை போட அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. நிதியமைச்சகத்தின் பணியாளர் மற்றும் செலவினத்துறை அதிகாரிகளின் கூட்டு ஆலோசனை பொறிமுறையின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தில் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 34 சதவீத அகலவிலைப்படி செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இன்னும் 5 சதவீதம் வரை அகலவிலைப்படி உயர்த்த வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்கள் அகலவிலைப்படி பிடித்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களின் அகலவிலைப்படி பல மடங்கு உயர்த்தப்பட்டும் இதுவரை நிலுவைத் தொகை வரவில்லை.

எனவே அரசு விரைவில் தங்களது நிலுவைத் தொகையை வழங்கும் என்று ஊழியர்கள் அனைவரும் நம்பிக்கையில் உள்ளனர். இருந்தாலும் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் ஆகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |