Categories
உலக செய்திகள்

“அர்ஜெண்டினா போர்க்குற்ற வழக்கு”…. முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு எதிராக…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!!

அர்ஜெண்டினா நாட்டில் கடந்த 1976 ஆம் வருடம் துவங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. இந்நிலையில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் (அல்லது) வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். அத்துடன் அந்த காலக்கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர்அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும், போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு பெறப்பட்டது. மேலும் மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலது சாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் கேம்போ டி மேயோ தடுப்பு காவல் மையத்தில் தடுப்புக் காவலில் வைத்து சித்ரவதைக்கு ஆளாக்கி காணாமல் போகச்செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ராணுவ ஜெனரல் சாண்டியாகோ ரிவேரோஸ் உட்பட 19 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் ஆளாகினர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை தலைநகர் பியூனோ அயர்ஸ்சிலுள்ள பெடரல் நீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் இராணுவ ஜெனரல் சாண்டியாகோ ரிவேரோஸ்சுக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்மீது மட்டும் 100 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிற 18 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் பல அளவிலான நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு அர்ஜெண்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |