Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு தேசம்: சந்திரபாபு நாயுடு விரலில் மோதிரம் போல் உள்ள ஹெல்த் மானிட்டர்…. எதற்காக தெரியுமா?….!!!!!

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே மஞ்சள்நிற சட்டை, வெள்ளைநிற பேண்ட், பையில் 1 பேனா என எளிமையாக காட்சியளிக்ககூடியவர் ஆவார். அண்மை காலமாக அவருடைய இடதுகை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் மோதிரம் அணிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதன பள்ளியில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பங்கேற்று சந்திரபாபு நாயுடு பேசியதாவது “நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரமல்ல. என் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர் ஆகும்.

இக்கருவியானது நான் சாப்பிடும் நேரம் மற்றும் எத்தனை மணிநேரம் உறங்கினேன், எவ்வளவு தூரம் நடந்தேன், எவ்வளவு நேரம் ஓய்வெடுத்தேன் என்பது தொடர்பான என்னுடைய நடவடிக்கைகள் மட்டுமல்லாது என் உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட உடல்நிலை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி கொண்டே இருக்கும்.

அதை என் மனைவி புவனேஸ்வரி கண்காணித்து தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது செல்போன் வாயிலாக எனக்கு தெரிவிப்பார். இதற்கென அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோசிப் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். அத்துடன் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |