ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யானை ஒன்று உணவு தேடி சாலையில் அலைந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் துரத்தி சென்றுள்ளது. ஆனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகமாக பின்னோக்கி நகர்த்தி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த யானை மகாதேவன் என்பவரை மிதித்து கொன்றது.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டக் காவலில் ஈடுபட்டு கொண்டிருந்த மல்லப்பா என்பவரையும் மிதித்து கொன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வனத்துறையினர் சாலைகளில் சுற்றி திரியும் அந்த ஒரு யானையை விரட்ட 2 கும்கி யானைகளை கொண்டு வர முடிவு செய்தனர். அதைப்போல் அந்த 2 கும்கி யானைகளும் தாளவாடி கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த கும்கி யானைகள் மூலம் அந்த ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.