கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு அதிரடியாக ஆய்வு செய்தார், அப்போது தாசில்தார் ஆனந்த சயனன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் தாசில்தார் விஜய்பாபு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கணக்குகளை பார்வையிட்டுள்ளார். மேலும் பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் போன்றவை வழங்குவது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டு அறிந்துள்ளார்.