நீங்கள் வருமான வரிக்குள் வராத வரம்பில் இருந்தால் கண்டிப்பாக ஜீரோ ஐடிஆர் (0 ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். அதனை நிரப்புவது உங்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். 2021-2022 (AY 2022-23) நிதி ஆண்டிற்கு வருமான வரித்துறையால் வருமான வரி அறிக்கை படிவம் (ஐடிஆர் படிவம்) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வருமானவரி கணக்கு தாக்கல் ஜூன் 15, 2022 முதல் துவங்கியது. நீங்கள் அலுவலகத்திலிருந்து படிவம்-16 பெற்று இருந்தால், விரைவில் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
ஏனென்றால் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதம் செலுத்த வேண்டும். 2வதாக கடைசிதேதி நெருங்கி வருவதால், இணையதளத்தில் அதிகவரி செலுத்துவோர் ரிட்டர்ன் தாக்கல் செய்வதால் சுமை அதிகரிக்கிறது. இது போன்ற நிலையில் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். எனவே முடிந்தவரையிலும் உங்கள் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வது நல்லதாகும். 2021-22 நிதியாண்டு (அல்லது) 2022-2023 மதிப்பீட்டு வருடத்துக்கான தாமதக்கட்டணம் இன்றி வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித்தேதி 31 ஜூலை 2022 என்பது குறிப்பிடத்தக்கது.
காலக்கெடுவிற்குப் பின் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, வருமான வரியின் பிரிவு 234A மற்றும் பிரிவு 234Fன் கீழ் அபராதம் செலுத்த வேண்டும். தனி நபர் HUFக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசிதேதி ஜூலை 31 ஆகும். இது தவிர்த்து தணிக்கை தேவைப்படுபவர்களுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 அக்டோபர் 2022 ஆகும். அதேநேரம் TP அறிக்கை தேவைப்படும் வணிகத்திற்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசிதேதி நவம்பர் 30, 2022 ஆகும்.