Categories
தேசிய செய்திகள்

“பிஎம் கிசான் திட்டம்”…. வரும் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதிதிட்டம் விவசாயிகளின் நிதி உதவிக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் 11-வது தவணையை பிரதமர் மோடி சென்ற மே 31 ஆம் தேதியன்று வெளியிட்டார். அந்த வகையில் இத்திட்டத்தின் 12-வது தவணையை எந்த இடையூறும் இன்றி பெற வேண்டுமானால் உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இருக்க வேண்டும். இல்லையென்றால் 12-வது தவணை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்குரிய கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்து இருக்கிறது. பிரதம மந்திரி கிசான்யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை ரூபாய் 2,000 வீதம் என மூன்று தவணைகளாக கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைகின்றனர். இதற்குரிய அடுத்த தவணையை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. அத்தகைய நிலையில் நீங்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி அடுத்த தவணைக்காகக் காத்து இருந்தால், உங்கள் இ-கேஒய்சி ஐ காலக்கெடுவிற்குள் முன்பே அப்டேட் செய்ய வேண்டும். ஆகவே இதுகுறித்த விரிவான தகவலை நீங்கள் பிரதம மந்திரி கிசான் போர்டல் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் பட்டியலிலுள்ள உங்கள் பெயர்களைச் சரிபார்க்க பிரதம மந்திரி கிசான் யோஜனா வாயிலாக பயன்பெறும் விவசாயிகள் முதலில் பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/-க்குச் செல்ல வேண்டும். அப்போது இங்கே விவசாயிகள் கார்னர் என்ற விருப்பம் தோன்றும். அதன்பின் பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தில் புது பக்கம் திறக்கும். அந்த புது பக்கத்தில் உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விபரங்களை உள்ளிட வேண்டும். அதனை தொடர்ந்து கேட் அறிக்கைக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் அனைத்து விவசாயிகளின் பட்டியலைப் பெறும் சூழ்நிலையில், இதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.

ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும்

# பிரதம கிசானின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்..

# பின் வலதுபக்கத்தில் கிடைக்கும் இ-கேஒய்சி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

# ஆதார்அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்ய வேண்டும்.

# ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

# தற்போது ஓடிபி பெறவும் என்பதைக் கிளிக் செய்வதன் வாயிலாக பெறப்பட்ட ஓடிபி ஐ உள்ளிட வேண்டும்.

# இதன் வாயிலாக கேஒய்சி புதுப்பிக்கப்படும்.

Categories

Tech |