கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக கூட்டம் இல்லாமல் இருந்த மெக்கா, நேற்று 10 லட்சம் மக்களுடன் களைக்கட்டியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருடந்தோறும் இஸ்லாமியர்கள் புனித பயணமாக செல்வார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, அங்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட புனித பயண சடங்குகளில் கலந்து கொள்ள 10 லட்சம் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் எடுத்துக் கொண்ட மற்றும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு சுமார் 25 லட்சம் மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 10 லட்சம் மக்கள் தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் மெக்காவில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இஸ்லாமியர்கள் புனித பயணத்தை மேற்கொள்ள தொடங்கி இருப்பதால் களைக்கட்டி காணப்படுகிறது.