ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சிந்தனைகள் வெற்றி பெற குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். துணையாக இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். இன்று மிக கவனமாக பேசுவதும் கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழிபிறக்கும். வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கூடுமானவரை பேசும்போது மட்டும் நிதானமாகப் பேசுங்கள் அது போதும். இன்று மாணவச் செல்வங்கள்கடுமையாக உழைப்பார்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பாருங்கள் அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும் .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள.நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்; நீலம் மற்றும் பச்சை நிறம்