ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். சாலைப்பகுதியில் வைத்து நடந்த அந்நிகழ்ச்சியில் ஷின்சோஅபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதன் காரணமாக ஷின்சோஅபே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் ஷின்சோஅபேயை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.