Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதன் முறையாக… இவர்களுக்காக தொடங்கிய மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிளிகிரிரங்கண பெட்டாவில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா போன்றோர் துவங்கி வைத்தனர். இந்நிலையில் மந்திரி சோமண்ணா பேசியதாவது “பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

நான் பொறுப்பு மந்திரியாகவுள்ள மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது பழங்குடிஇன பெண்களுக்கு உதவியாக இருக்கும்
என்று கூறினார். அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசியதாவது “பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் திட்டத்தின் நோக்கம் பழங்குடியின பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குவதாகும். மலைவாசி மக்களிடம் மாதவிடாய் பற்றி தவறான கண்ணோட்டம் இருக்கிறது. இதை மாற்ற இத்திட்டம் உதவியாக இருக்கும். மாதவிடாய் பெண்களுக்குள்ள மாற்றம் தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இதற்கென பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதற் கட்டமாக சாம்ராஜ் நகர், தட்சிண கன்னடா மாவட்டங்களில் சோதனை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். பழங்குடியின பெண்கள் மாதவிடாய் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்டுதெரிந்து தீர்த்து கொள்ளலாம். பழங்குடியின மக்களை மூட நம்பிக்கையிலிருந்து விடுவிக்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இந்தியா முழுதும் பழங்குடியின மக்களுக்கு மத்தியஅரசு சானிட்டரி நாப்கின் வழங்குகிறது. இதன் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பழங்குடியின பெண்களுக்கு சானிட்டரிநாப்கின் வழங்கப்படுகிறது. ஆகவே யாரும் பயப்பட தேவையில்லை” என்று அவர் பேசினார்.

Categories

Tech |