கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூவந்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுரை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் கிரானைட் கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரானைட் கற்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.