Categories
மாநில செய்திகள்

இனி ரொம்ப ஈஸி…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் முன்பதிவில்லா ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 192 விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் நெல்லை மற்றும் செங்கோட்டை இடையேயான முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது.

பின்னர் திருநெல்வேலி -திருச்செந்தூர், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான விரைவு ரயில்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் திருநெல்வேலியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூரை சென்றடையும்.அதனைத் தொடர்ந்து மணியாச்சியிலிருந்து தினமும் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இதன் அடுத்த கட்டமாக ஜூலை 11ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கரூர், கோவைக்கு வரும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஈரோடு -மேட்டூர் அணை ரயிலும் 11ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் முன்பதிவுள்ள ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |