மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம்,கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடைபெற்றுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கி வருகிறது.தமிழில் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கனடா ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
The Cholas Are Coming! #PS1Teaser
▶️ https://t.co/n197lcSnQM#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial @TipsRegional #TipsTamil
— Lyca Productions (@LycaProductions) July 8, 2022