சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் கருமுட்டை எடுத்து சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், அவரது 2- வது கணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அதன்பின்னர் அந்த சிறுமியை ஆர்.என். புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து அந்த சிறுமி பினாயிலை குடித்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து அந்த சிறுமையை அருகில் இருந்தவர்கள் விட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த பிறகு அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழு சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை செய்த 4 பேரிடமும் நேற்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர் மல்லிகா துரைராஜ், சரண்யா ஜெயக்குமார், முரளி குமார், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமாகுமாரி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.