Categories
உலக செய்திகள்

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்…. பறிபோன விமானிகளின் உயிர்…. சீனா நாட்டில் பரபரப்பு….!!

பெல் 505 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீன நாட்டில் பீஜிங் என்ற புறநகர்ப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தானது உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில்  ஏற்பட்டுள்ளது. பெல் 505′ ரக ஹெலிகாப்டர் விபத்தில்  2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த ஹெலிகாப்டரானது பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டரில் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்துக்கான காரணம்  அறிய சீன அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளனர்.

Categories

Tech |