மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த திட்டவளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிதம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் பேசினார்.
அவர் வேலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது என்றும், ஆசிரியர்கள் கடுமையாக உழைத்தால் முதல் 30 அல்லது 20 இடத்திற்குள் வந்து விடலாம் என்றும் கூறினார். இதனையடுத்து 90% தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மாணவர்கள் 100% மதிப்பெண்கள் எடுப்பதற்கு விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் விதமாக பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும் அரசு பள்ளிகளில் ஆய்வக வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படும் எனவும், உயிரியல் பாடங்களில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.