Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.26¾ லட்சம் மோசடி…. பணம் கேட்டவர்களுக்கு மிரட்டல்…. அதிகாரிகளிடம் மனு….!!

சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில் நாமக்கல் – பரமத்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு நாங்கள் பொருட்களை வினியோகம் செய்தோம். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் நி்ாவாகம் வினியோகஸ்தர்களுக்கு கடந்த 2, 3 மாதங்களாக எந்த ஒரு தொகையும் செலுத்தவில்லை. அந்த பணத்தை அவர்களிடம் கேட்டால் எங்களை மிரட்டுகின்றனர். எனவே எங்கள் 36 பேருக்கும் வர வேண்டிய ரூ.26 லட்சத்து 77 ஆயிரத்து 544-ஐ பெற்று தருமாறு அதில் கூறியிருந்தனர்.

Categories

Tech |