ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் ஒன்றை தலைமை குறித்து நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவருக்கும் மண்டை உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஆதரவாக நடந்த செயல்வீரர் கூட்டத்தில் உள்ளே புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சேர்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.