தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சாலமோன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெரியசாமி என்ற மகன் உள்ளார். கடந்த 27.6.2022 அன்று பெரியசாமியை தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110-ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் உதவி கலெக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு பெரியசாமியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 6 மாத காலத்துக்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பிணை பத்திரம் பெறப்பட்டு 6 மாத காலம் முடிவதற்குள் பெரியசாமியை கடந்த 2-ந் தேதி ஒரு கொலை மிரட்டல் வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பிணை பத்திரத்தை மீறியதால் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி உதவி கலெக்டர் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் பெரியசாமியை குற்றவியல் நடைமுறைச்சட்டம் 122 (1) (b) -ன் படி 23.12.22 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.