நம்பகத்தன்மை பிரச்சனையால் பிரபல பாப் பாடகரின் பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற அமெரிக்கா பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம் ஆடுவது என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கீப் யுவர் ஹெட் அப் மற்றும் மான்ஸ்டர் ஆகிய பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் பாடியவை என வெளியானது. இந்த பாடல்கள் சோனி மற்றும் பாப் நட்சத்திரத்தின் எஸ்டேட் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்த பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் பாடியவை தானா என்ற சர்ச்சை எழுந்ததால் பாடல்களை சமூக வலைதள பக்கத்திலிருந்து சோனி நீக்கியுள்ளது.