தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகாகவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் அவசியம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இரண்டு நாட்களாக சளி, காய்ச்சல் இருந்த நிலையில் பரிசோதனையிள் நேற்று 12 மாணவர்களுக்கு தொற்று. உறுதி செய்யப்பட்டது. மேலும் 19 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.