சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. சேலம், மேச்சேரி, தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடைபெறுவதால் இதனை முன்னிட்டு அந்த பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
Categories