Categories
மாநில செய்திகள்

உடனே கிளம்புங்க…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களே இன்று(ஜூலை 9)…… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.

அதன்படி ஜூலை மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று ( ஜூலை 9 ) காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. அந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம்,புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கூறும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை இந்த முக மூலமாக பெற்று பயனடையலாம்.

அது மட்டுமல்லாமல் நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டமாக இருக்கும் சமயத்தில் முதியவர்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து ரேஷன் பொருட்கள் வாங்குவது சிரமமாக இருப்பதால் அதற்காக இந்த அங்கீகாரச் சான்று தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அது குறித்து பொதுமக்கள் இந்த முகாமில் புகார் தெரிவிக்கலாம். மக்களின் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை போலவே ஓவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |