Categories
உலக செய்திகள்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு…. போலீஸ் அதிகாரிகளுக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணம் மினியோ பொலிஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரே போலீஸ் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட் தரையில் தள்ளி அவரது கழுத்தில் முட்டியே வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்க முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையில் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

இந்த வழக்கின் மீதான கொலை குற்றச்சாட்டு நிருபிக்கபட்டதையடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க கோர்ட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் கைது நடவடிக்கையின் போது போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் டெரெக் மீதான குற்றத்தை நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |