சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையதளங்களில் போலி கணக்குகள் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த போலி கணக்குகளை பயன்படுத்தி சிலர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதன்பிறகு டுவிட்டர் நிறுவனத்தை உலகப் புகழ் பெற்ற பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் 5% போலியான கணக்குகள் மட்டுமே இருக்கிறது எனவும், அதற்கான ஆதாரத்தை காட்டும் வரையில் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகராது எனவும் எலான் மஸ்க் திட்ட வட்டமாக கூறிவிட்டார். இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் தினந்தோறும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.