இன்னும் 2 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது அளித்து வரும் 200 யூனிட் இலவச மின்சாரம், 24 மணிநேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தது. மேலும் ஒரு குடும்பத்திற்கு 20,000 லிட்டர் வரை இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி நகரத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேலும் அன்றைய தினமே முடிவுகள் வெளியிட உள்ள நிலையில், தலைநகரைக் கைப்பற்றப் போவது யார் என்ற கேள்வி பொதுமக்கள் இடையே நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை, எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற கட்சிகள் இடையே சவாலாக களமிறங்கியுள்ளது என இணையவாசிகள் தெரிவிக்கின்றனர்.