தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லேகா நிறுவனம் வழங்க உள்ளது. இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்தினம்; “பொன்னியல் செல்வன் கதையை படமாக 80களில் இருந்தே முயற்சி செய்கிறார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு நடித்திருக்க வேண்டிய படம் இது தான். ஆனால் ஏதோ காரணத்தால் நின்றுவிட்டது. அவர் எங்களுக்காக விட்டு வச்சிட்டு போயிருக்காரு. இன்றைக்கு தான் புரிந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொன்னியன் செல்வன் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று அனைவரையும் ஆச்சரியத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.