சென்னை போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் தாம்பரம் கூட்டுச்சாலை அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பஸ்ஸில் முன்புற டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து சுதாகரித்த கொண்ட டிரைவர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் முன்புறம் கருப்பு புகையுடன் தீ பற்றி எரிந்தது. வெப்பத்தின் தாக்கத்தில் பஸ் கண்ணாடிகள் வெடிக்க தொடங்கியது. அந்த வழித்தடத்தில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இது குறி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தி எவ்வித அசாம்பாவிதம் நடக்காமல் தடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஸ்ரீபெருந்துர் ஒரடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேருந்தின் முன் பகுதி முழுவது எரிந்து சேதமடைந்தது. மேலும் பேருந்தின் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது