சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையில் 13 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுஎன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையில் இரவு 10 மணி, 10.20, 11 மணி, 11.20, 11.40, மற்றும் 11.59 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடற்கரை-செங்கல்பட்டு இடையில் இரவு 10.40 மணி, தாம்பரம்-கடற்கரை இடையில் இரவு 10.25 மணி, 10.45, 11.25 மற்றும் 11.45 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் ரத்து இன்று முழுவதுமாக செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல செங்கல்பட்டு-கடற்கரை இடையில் இரவு 10.15 மற்றும் 11 மணிக்கு புறப்படும் ஆகிய 13 மின்சார ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.