மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் முத்தமிழ் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: “திருவண்ணாமலை கோயில் சொத்துக்களை கட்டி காத்தது திமுக தான். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும். அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து.
மேலும் அறிவார்ந்தவர் யாரும் இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். பொய்யும், புரட்டும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களை பற்றி I don’t care.. நான் மட்டுமல்ல நீங்களும் ஒவ்வொருவரும் I don’t care… என்று கூறிவிட்டு நகர வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் உண்மையான ஆன்மீகவாதிகள் கிடையாது. அவர்கள் ஆன்மீக வியாதிகள் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒளிமயமாக காட்சியளிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் கூட்டம் இங்கு நடைபெற்று வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.