வீட்டில் அமர்ந்து கொண்டே 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டில் அமர்ந்து கொண்டே பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. மாதம் 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இது ஒரு பாதுகாப்பான முறை. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் உரிமையை பெறுவதன் மூலமாக நீங்கள் எளிதில் சம்பாதிக்கலாம். எந்த வங்கியின் ஏடிஎம் எந்திரமும் வங்கி சார்பில் நிறுவப்படுவதில்லை. அதற்கென தனி நிறுவனம் உள்ளது. அதன் ஒப்பந்தம் வங்கியால் வழங்கப்படுகிறது.
எனவே ஏடிஎம் உரிமையை பெறுவதன் மூலம் நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். எஸ்பிஐ ஏடிஎம் இன் உரிமையை பெற உங்களிடம் 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும். மற்ற ஏடிஎம்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும். ஒரு கிலோ வாட் மின் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். ஏடிஎம் இடத்தில் காங்கிரிட் கூரை இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
அடையாளச் சான்று – ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை.
முகவரி – ரேஷன் கார்டு, மின்சார பில்,
வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்
பிற ஆவணங்கள்
ஜிஎஸ்டி எண்
நிதி ஆவணங்கள்
எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதற்காக இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்கள் ஏடிஎம் அமைக்கும் தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
டாடா இண்டிகேஷ் – www.indicash.co.in
முத்தூட் ஏடிஎம் – www.muthootatm.com/suggest-atm.html
இந்தியா ஒன் ஏடிஎம் – india1atm.in/rent-your-space
இந்த நிறுவனத்தில் டாடா இண்டிகேஸ் மிகப்பெரிய மற்றும் பழமையான நிறுவனம் ஆகும். முதலில் நீங்கள் இரண்டு லட்சம் பாதுகாப்பு வைத்து தொகை வழங்க வேண்டும். இது தவிர மூன்று லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழியில் நீங்கள் மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதில் வருமானத்தை பார்த்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எட்டு ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு இரண்டு ரூபாயும் கிடைக்கும். அதன்படி மாதம் 33 முதல் 50 சதவீதம் வரை கிடைக்கும். உங்கள் ஏடிஎம்மில் தினமும் 250 பரிவர்த்தனைகள் நடந்தால் கூட அதில் 65 சதவீத பண பரிவர்த்தனை மற்றும் 35 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை என்று பார்த்தால் உங்களுக்கு மாத வருமானம் 45 ஆயிரம் ரூபாய் வரை வரும்.