Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. 5 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டிஹால் ரோடு பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் வருடம் கோவையில் படித்து வந்த 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அங்கு வைத்து அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் நடந்தது குறித்து கூறி அழுதனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் ஆஷிக்கை கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி தீர்பளித்துள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவிகளை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |