கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றானது அதிகரித்து வருவதால், 4-வது அலை பரவி மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று 2,765 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 939 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18,687 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,413 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றாலும், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆயிரத்தை தாண்டி சென்ற கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.