தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
வரும் 13ஆம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மலைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.