இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இலங்கையில் கடும் மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் அரசியல் நிலை தொடர்பில் ஆலோசனை செய்ய இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.