தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு 30.09.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடைய, படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த உதவி தொகை பெறுவதற்கு முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை தர்மபுரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வாங்கி செய்து விண்ணப்பத்தினை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சான்றுகளோடு 31.08.22 வரை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.