Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் ஆயிரம் உதவித்தொகை பெற நாளைக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்காத மாணவிகள் https://penkalvi.tn.gov in/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து உடனே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |