Categories
மாநில செய்திகள்

பட்டியலின வகுப்புச் சான்றிதழ் கேட்டு மனு…. ஒரே நாளில் அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருவண்ணாமலை சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் செஞ்சியில் முருகனின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகிய இருவரும் முதல்வரை சந்தித்து தங்களுக்கு சென்ற 7 வருடங்களாக பட்டியலின வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகவே முதல்வர் தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவனசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலித்த முதல்வர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியலின வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த வகையில் உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பும் வழியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செஞ்சியில் வாசன் மற்றும் பூஜா ஆகிய இருவருக்கும் பட்டியலின வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். இவ்வாறு மாணவன் மற்றும் மாணவியின் கோரிக்கை மனுவினை ஏற்று முதல்வர் உடனே நடவடிக்கை மேற்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேநேரம் முதல்வரிடம் நேற்று மனு அளித்து இன்று சான்றிதழ் கைக்கு வருகிறது எனில் உடனே நடக்கும் ஒரு விஷயத்தை 7 ஆண்டுகளாக அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ஆய்வின்போது அங்கு இருக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்று சான்றிதழ் தராமல் அழைக்கழித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறது.

Categories

Tech |