இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 9-ம் தேதி என்பது இலங்கை அரசியலில் முக்கிய சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. மே ஒன்பதாம் தேதி பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினார். இன்று ஜூலை 9ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.
அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் கோட்ட பையன் ராஜபக்சவும், பிரதமர் ரனிலும் பதவி விலக பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் பதவி விலகும் பட்சத்தில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபயவர்த்தன பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.