இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் ஆகிய முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அவ்வகையில் வரும் கல்வியாண்டிற்கான CUET பொது நுழைவுத் தேர்வு கணினி முறையில் ஜூலை மாதம் இறுதியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நடத்தப்படும் CUET முதுகலை பட்டப் படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.