Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 4 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்….!!!!

முயலை வேட்டையாடிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டம் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர்கள் புத்தூர் பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சடையன், காட்டு ராஜா, பழனியப்பன், பாக்கியராஜ் ஆகியோர் என்பதும், முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4  பேரையும் அய்யலூர் வனசரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அவர்களிடம்  இருந்த வளைகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, 5 ஆயிரம்  ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

Categories

Tech |